கண்ணாடி குப்பியும் காயம் கொண்டதோ
கல்லடி பட்டதோ கண்ணடி பட்டதோ
சில்லுகளாய் சிதறி சிந்துகிறதே குருதி
எல்லையிலா வலிய வலி கொண்டதுவோ
தொல்லை அதற்கும் தந்தது யாரோ
எல்லையில்லா எல்லா நோவும் யாரளித்திருந்தாலும்
எல்லோரறிய உடைந்தே உதிரம் உகுக்காதே
வல்லாரையும் வென்றே பொல்லாரையும் பொசுக்க
வலுவடைந்தே பழுது பார்த்திடில் புத்துருவேற்றிடலாமே
வலிமையது உடையக் காரணம் ஆனோரும்
வலு கண்டு உடைந்தே காணாதொழியட்டுமே…
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
படம் பார்த்து கவி: கண்ணாடி
previous post
