கருப்புச் சட்டையில், கம்பீரமாய் ஒருவன்,
கண்களில் மின்னல், கார்முகில் வாகனன்.
சாலை விரிந்தது, அவன் பயணம் தொடர்ந்தது,
பயமில்லா பார்வை, பறவையைப் போல் சுதந்திரம்.
ஒற்றைக் கையால் ஓசையின்றி அசைந்தான்,
உலகம் அவனுக்கு வசமாய் குனிந்தான்.
வேகம் அவனின் நண்பன், காற்றுடன் காதல்,
தூரம் கடந்து, திகட்டாத பயணம்.
இருண்ட தலைக்கவசம், உள்ளே ஒரு வீரன்,
பாதைகள் பல, பாதை அவனே தேர்ந்தான்.
கனவுகள் சுமந்து, காலத்தை வென்று,
கண்ணுக்குத் தெரியாத தூரம், அவன் தேடிச் சென்றான்.
இ.டி..ஹேமமாலினி
படம் பார்த்து கவி: கருப்பு
previous post