களிமண்ணேயாயினும் கவினுறு கலையுருவாகிடவும் கூடுமன்றோ
கி(ப)டைப்பவர் கையிலே கிடைத்திடக் கூடுமானால்
மண்ணும் மண்ணாயிருப்பதும் மதிப்படைவதும் மண்ணாலாகாதே
மாற்றிடும் மதியுடை மற்றவர் முயல்கையில்
மதித்திடும் இறையுருவெனவே மாற்றிடலாகுமே மனமுவந்து
இணைந்திடும் இடமதனாலே வணங்கிடும் நிலையுமாகலாமே
இடமறிந்தே இணைந்திருப்போம் இவ்வுலகினில் இனியேனும்
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
படம் பார்த்து கவி: களிமண்ணோயாயினும்
previous post