கொடி இடை மேலே
வெள்ளி கொடி தவழும் போது
கொடி தாங்கும் கொம்பாய்
நான் மாற வேண்டும்
இவள் இடை மீது தானே
என் இதழ் பட வேண்டும்
கறுப்பு உடை அணிந்து நீயும்
எடுப்பாய் ஏன் இங்கு வந்தாய்
இடுப்பு சேலை இடைவெளியில்
தகதகக்கும் தங்க மேனி கான
தேகமெல்லாம் சூடேறும்
கண்ணோ இடைக்கு மேலே
இடம் தேடும்
இடையோடு தானே நானும்
கரம் பதிக்க வேண்டும்
மலையில் ஆடும் முகிலாய்
மனம் பறக்க வேண்டும் என்று
சிவப்பு கம்பளம் விரிக்குது
தேகத்தில் இடையோடி கிடக்கும்
சிவப்பு வண்ண ஜரிகை சேலை
சர் கணேஷ்