பல வண்ணங்கள் தன்னில் ஒளிந்திருக்க,
மின்னும் மேனியாய் நீ!
உனக்குள் கண்டேன் பல உலகங்கள்…
உணர்வுகளின் பொக்கிஷமாய் ஓடிய கதைகள்!…
பெரிய திரையிலும் அடங்காத உயிர்ப்பு,
உனது சாளரத்தில் துடித்த காலம்…
அது ஒரு வசந்த காலமே!…
ஒரு காலத்தில் நீயே எங்கள் ராஜா…
உன் ஆதிக்கம் மறைந்த போதும்,
எங்கள் நினைவுகளில் நீ என்றும் வாழ்கிறாய்!
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: பல
previous post