பூத்துக் குலுங்கும் பல வண்ண
ரோஜாக்கள் பாலிதீன் கண்ணாடி அறைக்குள்ளே
வகையாய் .. அழகாய் அமர்ந்தே வாழ்த்துக்கள்
பகரும் ஊடகமாய்…வாடும் நொடியின்
கவலை களைந்து வாழும் நிமிடங்களின்
சுகம்தனை கர்வம் சுமந்தே சுகந்தமாய்ப்
பரவிடச் செய்திடும் வித்தை சொல்லிக்
கொடுப்பாயா எனக்கும் வாச மலரே?
நாபா.மீரா
படம் பார்த்து கவி: பூத்துக்
previous post