படம் பார்த்து கவி ‘ மனிதா

by admin 3
20 views

மனிதா
உடல் முழுவதும் உனக்கு
கொடுக்கில் இருக்கு எனக்கு
கனப்பொழுது கடுக்கும் விசமெனக்கு
காலமெல்லாம் வலிக்கும் விசமுனக்கு
மனிதா
தேகத்தில் விசம் எனக்கு
பாதுகாப்புக்காய் அது இருக்கு
மனதில் எண்ணத்தில்  இருக்குது
வார்த்தையில் தெறிக்குது உனக்கு
மனிதா
நான் உமிழும் விசம்
சிலநேரம் மருந்தாகும் உனக்கு
உனக்குள் இருக்கும் விசம்
உன்னுயிரையும் அது பறிக்கும்!
                         

  சர். கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!