மழைத்துளிகள் ஜன்னலில்,
இதயத்தில் மெல்லிய அலை.
வண்ண மலர்கள் அங்கே,
கண்களுக்கு விருந்தாய் இங்கே.
கருமேகம் சூழ்ந்த வானம்,
குளிர்ச்சி படர்ந்த பூவனம்.
ஒவ்வொரு துளியும் ஒரு முத்தம்,
பூக்களோடு ஒரு ஒப்பந்தம்.
செம்மையும் செந்தூரமும்,
அன்பின் சங்கமமாய் அழகூட்டும்.
பூக்களின் மௌனம் பேசும்,
காதலின் கதையை உரைக்கும்.
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: மழைத்துளிகள்
previous post