மழைத்துளியின் சாரல் கண்ணாடி பிம்பத்தில் சிதறியோட…
கருமையின் இருளில் பல வண்ணங்களில் சிரிக்கும் ரோஜா மலர்கள்…
ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு உணர்வுகளின் சாராம்சம்…
ஆரஞ்சு நிறம் ஆதவனின் ஒளிக்கீற்றாய் மின்ன…
சிகப்பு நிறம் இரு இதயத்தின் காதல் சொல்ல…
இளஞ்சிவப்பு நிறம் இசையாய் மாறி,
பூக்களின் கூட்டம் மௌன மொழி பேச…
மழையின் மொழி மண்வாசத்தோடு பூவாசமும் சேர்க்க…
இரண்டு மணமும் உணர்வுகளை தூண்ட…
இதயத்தில் பரு இன்பம் பரவ காட்சிப் பிழையாய் காலமும் மறைய.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: மழைத்துளி யின்
previous post
