மீண்டும் ஒரு முறை
உன் திருமுகம் தீண்ட
நெடு நாளாய் தவமிருந்தேன்
ஜன்னல் திரை விலக்கி
காத்திருந்தேன்!
வான் நிலவை அழைத்து
நங்கை நிலையறிய பணிந்தேன்
மங்கை உருவெடுத்து நிலவும்
மதி முகத்து மங்கைக்கு
அருகில் இருந்தால் நித்தம்
தேன்நிலவாய் வாழ்வு அன்றில்
தேய்நிலவு போலே தாழ்வு
சர். கணேஷ்