முகமறியாத் தாய்மீது
நம்பிக்கை வைத்து
அன்புத் தந்தை
விரல் பிடித்து
ஆசையுடன் பிறந்தாள்
தங்கம்…
தொட்டிலில் மழலையாக
நடக்கும் பேதையாக
பள்ளிச் சிறுமியாக
பெதும்பை மங்கையாக
அழகாக வளர்ந்தாள்
தங்கம்…
ஆனால்…
பெயராயிருந்த “தங்க”த்துக்கு
தங்கம் எவ்வளவு தருவீர்கள்?”
எனக் கேட்டனர்
பெண் பார்ப்பவர்கள்…
முதலில் அழுந்தின
ஊமை உணர்வுகள்
பின்னர் அழிந்தன
ஆசைக் கனவுகள்
மனம் பேசும் திருமணத்திற்கு பட்டியலோடும் பிணையோடும்
வந்து சேர்ந்தது
பாசமற்ற பாகன்களின் கூட்டம்.
கண்களில் கனவின்றி
ஊமை உணர்வுகளோடு
மணமகளின் மனவலி நடனம்
“தங்கம்” பெயராக
பெருமை கொள்ளும்
பாரம்பரிய மதிப்போடு
பிறந்த பெண்ணுக்கு…
இந்த மண்ணில்
“தங்கம்” தண்டனையின்
விலையாய் தண்டவாளத்தை
தேடும் துயரமிகு கொடுமை.
நா.பத்மாவதி
கொரட்டூர்
படம் பார்த்து கவி: முகமறியாத்
previous post