விசும்பும் கடலும் சங்கமிக்கையில்,
இளஞ்சிவப்பு வண்ணம் வானைப் போர்த்திக் கொள்ள,
ஆகாயம் அண்ணாந்து பார்த்திட,
ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள்,
கண்களுக்குப் பெரும் பெட்டகங்களாய்!
இயற்கையின் வனப்பைப் போர்த்தி,
கம்பீரமாய் நிற்கும் கானகச் சிலைகள்!
இவை வெறும் சுவர்கள் அல்ல,
மனிதனின் கனவுகள்…
ஆம்,
ஆசைகளின் வானுயர்ந்த அடையாளங்கள்…
ஒரு புறாவின் கூடு போலொரு,
சிறு இடத்திற்காய்,
ஓயாது போரிடும் மனித வாழ்வின்,
தீராத தாகம் இது!…
அவன் நெஞ்சில் பொதிந்த ஆசைகளின்,
வானுயர்ந்த சாட்சிகளாய்,
அசைந்து நிற்கின்றன இக்கட்டிடங்கள்.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: விசும்பும்
previous post