விண்ணை நோக்கி உயர்ந்த கட்டிடங்கள்,
ஒவ்வொன்றும் ஒரு கனவின் கோபுரம்.
ஜன்னல்களில் மின்னும் ஒளி,
நகரத்தின் இதயத்துடிப்பு அது.
மேகங்கள் தவழும் உச்சிகள்,
கீழே மனிதர்களின் ஓட்டம்.
ஒவ்வொரு மாடியிலும் ஒரு கதை,
வாழ்க்கையின் அத்தியாயங்கள் அவை.
கான்கிரீட் காட்டில் பூத்த வாழ்க்கை,
எண்ணற்ற கனவுகளின் சங்கமம்.
இரவில் ஒளிரும் நட்சத்திரங்கள் போல்,
நகரத்தின் பெருமைக்கு சாட்சி இவை.
இ.டி. ஹேமமாலினி
படம் பார்த்து கவி: விண்ணை
previous post