துள்ளிக் குதிக்கும் குழந்தைப் பருவம்
தளிர் நடை போட முயல்கையிலே
தந்தை, உற்றார் உறவினர் மேலேறி
உப்பு மூட்டை செல்ல ஆசை
பருவம் விரிய விரிய யானை
குதிரை பலப் பல சவாரிகள்..
இதோ இங்கே வெள்ளைப் பறவையின்
மீதேறிச் சவாரி சென்றிடத் துடிக்கும்
பெண் குழந்தை… ஆகக் குழந்தைகளின்
பிடித்தமான விளையாட்டு முதுகின் மேலேறிச்
சவாரி செய்வதேயாம்…..
நாபா.மீரா
