நீலவானின்
நிலவொளியும்
நீளுகின்ற
நில(வி)இருளை
நீக்கிடுமோ
நிலையெனவே…
இலாந்தரும்
இருளகற்றிடலாம்
இரவோன்
இலாதபோது
இரவினிலே..
இருப்பினும் ,
தேய்ந்தேனும்
தினமொளிரும்
திங்களினும்
தூயவொளி
தரக்கூடுமோ!?
தெள்ளெனவே….
மாய்ந்தே
மறைந்தே
மறுதினமும்
மீண்டே
மின்னியே
முழுதா(மதியா)குமே
ஓய்ந்தே
ஒழியாதே
ஒவ்வொன்றிலும்
ஒளிர்ந்தே
ஒளிர்விக்கும்
ஒளிர்மதியதுவாய்
ஒளிர்ந்தே
ஒளிர்வித்தே
வளர்ந்தே
வளர்வித்தே
வாழ்ந்திடுவோம் வாழ்நாளெலாமுமே…
குமரியின்கவி
சந்திரனின் சினேகிதி
சினேகிதா
ஜே ஜெயபிரபா_
