கவிஞர்: கார்த்தி சொக்கலிங்கம்
மறுநாள் விடியல் என் வாழ்க்கையின்
முக்கியமான தருணம் என்று எண்ணிக் கொண்டு கண்ணயற…
எப்பொழுதும் போல விடியல் சலிப்புடனும் இயந்திரத் தனத்துடனும் இல்லாமல்…
ஓர் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும்
எழுந்து, அவசர அவசரமாக கிளம்பி
வெளியேறி இருக்க….
மனதில் எண்ணங்கள் யாவும் அதைக் காணப் போகும் பரவசத்துடன் இருக்க…
இதோ.. கண் முன்னே நின்ற அதைக் கண்டு விட்ட மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க….
அம்மா என்னை அமைதி படுத்த, நானோ இன்னும் இன்னும் ஆராவாரமாக சத்தம் எழுப்ப….
அதன் அருகில் நெருங்கி, பின் அமர்ந்த சிறிது நேரத்தில்….
அந்த செந்நிற பட்டாம்பூச்சியாள்
தன் இறக்கைகளை விரித்துக் கொண்டு பறக்கத் தொடங்கி விட்டாள் ஆகாயத்தில் !!! எங்களை எல்லாம் ஏற்றிக் கொண்டு…..