அகவை தினங்களும் ஆண்டு முடிவே
திருமண நாட்களும் ஆண்டின் கழிவே!சுதந்திர தினமோ மகளிர் தினமோ
மரங்களை நடச்சொல்லும் தலைவர்கள் தினமோ
கோவில் விழாவோ குடும்ப விழாவோ
கும்மி அடித்திடும் குலதெய்வ உலாவோ!
மனிதருக்கு மனிதர் குடும்பத்திற்கு குடும்பம்
ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு
வெவ்வேறு தினங்கள் வெவ்வேறு மதங்கள்!
ஆங்கிலப் புத்தாண்டே அகிலம் மகிழ!!
பூமலர்