ஒரு பக்க போட்டிக்கதை: தாய்

by admin
86 views

எழுத்தாளர்: ஹேமா நாராயணன்

கைபேசியில் அலாரம் அலற, பத்து என்கிற பத்மநாபன் உடனே எழுந்து வெளியே வந்து பாத்ரூம் லைட்டைப் போட்டான்,எழுந்ததிலிருந்து அரைமணி நேரத்தில் பல வேலைகளை வேகமாக முடித்து, “ ஸௌம்யா” என, அவள் “காபியுடன் வந்து, “சூடா இருக்கு பார்த்து” என்று சொல்லி, கோலம்போட, வாசற்கதவைத் திறந்தாள்.

சரியாக ஆறு மணிக்கு, பத்துவின் நண்பன் கேஸவன் வந்து, “ரெடியா?” என்று கேட்க, பத்து “ரெடி! கிளம்பலாம்” என்றான்.அன்று அவன் தாயின் பிறந்தநாள்.. ஆதலால், முதியோர்கள் இல்லத்தில் இருக்கும் தன் தாயைப் பார்க்கத்தான் இந்த அதிகாலைப் பயணமே.

பத்து, தன் தாயோடு மனைவி ஸௌம்யாவுக்கு ஒத்துப் போகவில்லை என்று, அவளை, நகருக்கு அப்பால் உள்ள, ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்திருந்தான். இருவரும் புறப்பட்டார்கள்.செல்லும் வழியில், தாய்க்கும் அந்த முதியோர் இல்லத்தில் இருந்த மற்றவர்களுக்கும் பழங்கள் மற்றும் உணவுப் பொட்டலங்களை வாங்கிக்கொண்டு, முதியோர் இல்லத்தை கவனித்து வரும் சேதுபதி ஐயருக்கும் மரியாதை நிமித்தமாக ஒரு பரிசுப்பொருள் தயார் செய்து, ஏழரை மணிக்கு அந்த இல்லத்தை அடைந்தார்கள் இருவரும்.அந்த இல்லத்தை அடைந்தபோது, அந்த இல்லம் எப்போதும் போல் இல்லாமல், சற்று பதட்டத்துடன் இருந்தது..

நேரே சேதுபதி ஐயரின் அலுவலக அறையை அடைந்தார்கள்.. அங்கே அவர் இல்லை; ஆனால், இரண்டு நிமிடங்களில் கையில் ஒரு மருத்துவர் சான்றிதழுடன், முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு, தன் அலுவலக அறைக்குள் நுழைந்தார் சேதுபதி ஐயர்.நுழைந்தவுடனேயே, அங்கு உட்கார்ந்திருந்த பத்துவைப் பார்த்து, “சரியான நேரத்துக்கு வந்துவிட்டாய்.

நானே உனக்கு போன் செய்யவேண்டும் என்று நினைத்தேன். காலையிலிருந்து அம்மா இருமிக்கொண்டிருந்தாள். நேற்று இரவு முழுவதும் ஜுரம். நேற்று இரவு டாக்டர் வந்து பார்த்துவிட்டு, சாதாரண ஜுரம்தான்; பயம் ஒன்றுமில்லை என்று சொன்னார். ஆனால், இன்று காலை இருமல் அதிகமாகி, சட்டென்று மூச்சு அடைத்து,

எங்களைக் கூப்பிட வாயெடுத்தவள் அப்படியே அடங்கிப்போனாள். நான் அவளருகே செல்லும்போது இலேசாக சுவாசம் வாங்கியது; உடனே மருத்துவரைத் தொடர்பு கொண்டேன்; அவரும் உடனே வந்து பார்த்துவிட்டு, இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு, உன் தாயைப் பார்த்து, கைகூப்பிவிட்டுச் சென்றுவிட்டார்.

அவர் சென்ற அடுத்த நிமிடம், அம்மா ஏதோ பேச வாய் எடுத்து, பேசமுடியாததால், கண்களில் ஜலம்விட்டு, கைகளால் பத்து விரல்களையும் காண்பித்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னே, கூப்பிய கையோடு இருந்த அவள் உயிர் பிரிந்தது. மீண்டும் மருத்துவரை அழைக்க, அவர் வந்து, அவள் பிராணன் பிரிந்துவிட்டதை அறிவித்து, அவர் கொடுத்திருந்த டெத் செர்டிபிகேட்டை பத்துவிடம் கொடுத்தார் சேதுபதி ஐயர்.மரணத் தருவாயில், அம்மா என்னை நினைத்திருக்கிறாள், நினைத்த நொடியில், பத்துவின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.

சேதுபதி ஐயரும், அவன் நண்பன் கேஸவனும் எவ்வளவு தேற்றியும், பத்து விடாமல் கதறினான். மெள்ள அவனை ஆசுவாசப் படுத்தி, “ஆகவேண்டிய விஷயங்களை ஏற்பாடு செய்யவேண்டும். என்ன செய்யப்போகிறாய்? அவளது ஈமக்கிரியைகளை எங்கே செய்யப்போகிறாய்? இங்கேயேயா அல்லது நீ இருக்கும் இடத்திலா? சீக்கிரம் முடிவுசெய். மற்ற முதியோர்கள் பயப்படுவார்கள்.

அவர்களுக்கு காலை சிற்றுண்டி வேறு இன்னும் தயாராகவில்லை. பசியோடு இருப்பார்கள் “என்றார் சேதுபதி ஐயர்.கேஸவன் குறுக்கிட்டு, “அய்யா! நீங்கள் சிரமப்படவேண்டாம். இங்கிருக்கும் எல்லோருக்கும் சேர்த்து, நாங்கள் பழங்களும், உணவுப்பொட்டலங்களும் வாங்கி வந்துள்ளோம். எல்லோருக்கும் கொடுத்துவிடுங்கள்” என்று கையிலிருந்த அந்தப் பெரிய பிக் ஷாப்பர் பேக் இரண்டையும் அவரிடம் கொடுத்தான்.அம்மாவின் பிறந்த நாள் இன்று.

அவள் ஆசியை வாங்கத்தான் தன் நண்பனோடு ,இங்கே வந்தான் பத்து, அவள் பிறந்த நாளே, இறந்த நாளும் ஆயிற்றே என்று நொந்து, அவளுக்கு அங்கேயே ஈமக்கிரியைகள் செய்யத் தயாரானான். அதற்கு முன்னே, சேதுபதி ஐயர் பத்துவின் மனைவியைக் கைபேசியில் அழைத்து, அவள் மாமியார் இறந்த விஷயத்தைக் கேஸவன் சொல்ல, “சரி சரி. நானே ஒரு cab புக் செய்துகொண்டு, அங்கு வந்துவிடுகிறேன்” எனக் கூறி சுட் செய்தாள்.அம்மாவின் இறுதிச்சடங்கு அங்கிருந்த பெரியோர்கள் புடைசூழ நன்கு நடந்தேறியது.“சேதுபதி ஸார்! ரொம்ப நன்றி.

என்னைக்காட்டிலும், என் தாயிடம் மிக்க அன்பு காட்டி, அவளைப் பாதுகாத்திருக்கிறீர்கள் “என்று சொல்லி, ஒரு காசோலையில் கணிசமான தொகையை எழுதி, அந்த முதியோர் இல்லத்தின் பெயரை அதில் எழுதிகொள்ளச் சொல்லி, அவரிடம் கொடுத்தான் பத்து. “இதெல்லாம் எதற்கு “என்றார் சேதுபதி ஐயர்?என்ன காரணம் சொல்வது? “அப்புறம் பேசுகிறேன் ஸார்! என்று சொல்லி, அவரிடமிருந்தும் அங்குள்ளோர்களிடமும் விடைபெற்றுக்கொண்டு தன் மனைவியுடன் அங்கிருந்து கிளம்பினான் பத்து.

காரில் ஏறி அமர்ந்தவுடன், கார் டிரைவர் ரேடியோவை ON செய்தார். வேண்டாம் அணைத்துவிடு!” என்று பத்து வாயைத் திறக்க முற்பட்டபோது, ஏசுதாஸ் பாடிய “அம்மா என்றழைக்காத உயிரில்லையே! என்ற பாடல் மனதைச் சுக்குநூறாக்கியது. பொங்கிய துக்கத்தை அடக்கிக்கொண்டு, வீட்டை அடைந்து குமுறிக் குமுறி அழுதான் பத்து என்கிற பத்மநாபன்.

முற்றும்.

ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/2024%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

You may also like

Leave a Comment

error: Content is protected !!