கவிஞர்: அருள்மொழி மணவாளன்
ஓ.. வண்ணத்துப்பூச்சியே..
எங்கே தொலைத்தாய் உன் வண்ணங்களை
பட்டப்படிப்பு படித்து பாரினில் சிறக்க வேண்டும் என்று
பட்டிக்காட்டு பெண்ணின் தொலைந்த கனவை போல
தொலைத்தாயோ உன் வண்ணங்களை
குடும்ப பொறுப்பு ஏற்று திரைகடல் தான்டி ஓடி
சுடும் அக்கினி வெயிலில் வண்ணம் இல்லா மணலில்
ஆசை தொலைத்த இளைஞர்கள் போல
தொலைத்தாயோ உன் வண்ணங்களை
சின்ன பூச்சி நீ
என்ன செய்வாய் என
நினைப்பவர் முன்
சாம்பலில் தோன்றும் ஃபீனிக்ஸ் பறவையாக உயர பறப்போம்
தொலைந்த வண்ணங்களை விடுத்து புதிதாய் உருவாக்குவோம்
புதிதாக படைப்போம் பல வண்ணங்களை…
ஓ.. வண்ணத்துப்பூச்சியே..