இரு நாற்காலிகள்…
எதிர் எதிரே இரண்டும்..
யாரோ வருவார் என!
வலைத் துணி மென்மையாய் தழுவிடும் ஆசனம்,..
தேநீர் ஆவி பறக்க, காத்திருக்கும் தருணம்!
அலை வந்து முத்தமிடும் மணல் வெளியில்,..
அந்தி சாயும் பொன்னிற வேளையில்!
ஒரு மெல்லிய காற்று இசைக்கும் ராகம்,
இரு மனங்கள் இணையும் இனிய யோகம்!
யார் வருவார் என விழிகள் தேடும்?
இதயத்தின் ஓசை மெல்ல கூடும்!
ஒருவரின் வருகைக்காக இன்னொன்று ஏங்கும்,
அந்த இனிய தருணத்தை எண்ணித் தவிக்கும்!
காதலின் வரவுக்காய் காத்திருக்கும் காட்சி இது!
இ.டி. ஹேமமாலினி