கறுத்த நிறத்தில், கூரான முனைப்பில்,
வெட்ட மட்டுமே பிறந்த கத்தரிகோல்..
துணிகள் பிரிக்க வந்த கருவிக் கோலே,..
ஒட்ட என்னால் முடியவே முடியாதே!?
வெண்மை நிறத்தில், மென்மையாகப் படர்ந்து,
டிஸ்யூ தாள் மீது கௌரவம் கொண்டாயோ?
கண்ணுக்குப் புலப்படாத நூலிழைகள்,
உன் கூர்முனைக்கு அஞ்சியே நிற்கும்.
பயன்பாட்டுக்கு அரியதாய் இருந்தாலும்,
உன் அழகில் அடங்கியது ஒரு சிற்பம்.
தாளின் மீது தணிவாய் நீ ஓய்ந்திருக்க,
கதை ஒன்று சொல்வாய் கத்தரிக்கோலே!
எண்ணற்ற கோடுகள், எத்தனை துண்டுகள்,
உன் கைகளில் உருவான உலகங்கள்!
பிரிப்பதே உன் பணி, சேர்ப்பதல்ல;
அதுதான் உந்தன் இயல்பு, வேறில்லை!
இ.டி.ஹேமமாலினி