காபி வித் கணினி
எங்கும், எதிலும், எல்லாம் கணிணிமயம்
24/7 சுழற்சியில் இயங்கும் IT நிறுவனங்கள்
அலுவலகமே வீடாய்.. அங்கிருக்கும் மக்களே
உறவினராய்….. உழைக்கும் நாடுகளுக்கேற்ற
நேர சுழற்சி முறையில் உண்பது தொடங்கி
தூக்கம் வரை நேரம் அனைத்தும் தலைகீழாய்
உணவுப் பழக்கத்திலும் மாற்றங்கள்
ஏடாகூடமாய் …
WFO/WFH(Work From Office/Home)
ஆங்கிலப் பதமும், சுருக்கமும் அழகுதான்
ஆயின் வித்தியாசம் பெரிதாய் இல்லையே
விடியலின் தொடக்கமே காபியும் கணினியும்
அருகருகே உதட்டுக்கு ஒன்றும் விழிகளுக்கு
ஒன்றுமாய் இலக்கற்ற இயந்திரமயமான தேடல்களோ?
நாபா.மீரா