குட்டிக் கண்ணாடிக் குடுவைக்குள் திரவத்துள்
அமிழ்ந்திருக்கும் விழி லென்ஸே…. விஞ்ஞானம்
மெய்ப்பிக்கும் உன் சாதனைகள் சாகசங்களாய் ….
கண் ஆடிகள் ஒதுங்கியே விழிக்குள்
பாந்தமாய் நுழைந்திடும் வண்ணம் பல
காட்டும் லென்ஸ்கள் நாகரிக உலகின்
அச்சாரமாய்….அத்தியாவசியமாய்….இறைவன் கொடுத்த
இயற்கைப் பார்வைதனைத் தொலைத்தே செயற்கை
இன்பம் துய்க்க விரும்பும் போதை
ஏறிட்ட பேதை மனிதர்கள் நாம்…
நாபா.மீரா