ஜாகிங்
ஓடி ஓடிக் களைத்தாலும் மனமோ
உடலோ எதையாவது தொடர்ந்து ஓடத்தானே
செய்கிறது…. நடையும், அயராத உடல்
உழைப்பும் அன்றாடமாய் ஆரோக்கிய வாழ்வுதனைத்
தழுவிய காலங்கள் வழுவியதில் நடை
இன்று பயிற்சியாய் மாறிட்ட காலத்தின்
கோலம்…. ஜிம், ஜாகிங் என
புதுப் புது தேடல்கள் நாடியே
ஓட்டம் எனில் மீட்போமா ஆரோக்கியமதனை?
நாபா.மீரா