மூடித் திறக்கும் இமைகள் காவலனாம்
விழிகளுக்கு… மனமும், உணர்வும் பத்திரமாய்
இதய அறைக்குள் …. வீட்டுக்குக் கதவும்
வங்கிக்குப் பெட்டகமும்….இப்படியாய்ப்
பாதுகாவலர் ரகத்திற்கு ஒன்றாய்… மூடியே
இருத்தல் நல்லதன்று…கதவு திறந்தால்தானே
காற்று.., உணர்வுகள் திறவா மனக்கதவுதனுக்கும்
மிகப் பொருத்தம் இது…ஆக
மனக்கதவு திறப்போம்….அழுத்தும் உணர்வுகள்
தவிர்த்து உடலாலும் மனத்தாலும் அமைதியாய்
வாழ்வோம் வாரீர் எனதருமை நட்புகளே…..
நாபா.மீரா