விரல் நுனியில் தவழும் விழி லென்ஸ்,
வியக்கும் கண்களின் ரகசியம்.
மங்கலான காட்சிகளைத் துடைத்து,
மாயமாய் தெளிவு தரும் மந்திரம்.
சிறு கணம் தாங்கிக் கொள்ள,
சகலமும் புலப்படும் பார்வையில்.
உலகைச் செதுக்கும் கருவி,
உன்னதப் படைப்பு இது அன்றோ!
ஒளி வெள்ளம் விழிகளில் பாய்ச்சி,
ஒவ்வொரு நொடியையும் சிறப்பிக்கும்.
பார்வைக் குறை தீர்க்கும் நண்பன்,
புது வாழ்வு தரும் பொக்கிஷம்.
இ.டி.ஹேமமாலினி