படம் பார்த்து கவி: அன்பை

by admin 3
105 views

அன்பை உணர்த்தும் இதயத்தின் குறியீடு
தாங்கிய நிறம் சிகப்பு காதல்
தூதுவனாம் ரோஜாவின் நிறமும் அதுவே !
உடலின் கண் பாயும் குருதி ஊற்றெடுத்து
அன்பாய்ச் சுரப்பதால் வந்திட்ட செந்நிறமோ
இந்நிறம்… பியானோவும், சிகப்பு ரோஜாவும்
ஒரு வேளை முன் ஜென்மத்தில்
காதலர்களோ? பியானோவின் மென்வருடலில்
மௌனம் உடைந்து இதழ்கள் விரித்தே
தன் காதல் பகிர்ந்திடுவாளே ரோஜாராணி….


நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!