ஆர்க்டிக் நிலமதன் உறை பகுதியே
வாழிடமாய்… வெப்பச் சலனம் காரணமாய்
உறை நீர் உருகினாலோ வாழ்வே
போராட்டம்தான்… பாலூட்டிகளாம் அவை தம்
குட்டிகளை ஈன்ற பொழுதிற் அடைகாத்திடுமே
பனிக் குகைதனிலே…. கடல்சார் உயிரினமாம்
இக் கரடிகள் மாமிச உண்ணிகள்
வேட்டையாடுவதோ கடல் வாழ் உயிரினங்களே
புவி வெப்பமயமாதலில் இனங்கள் அழியும்
நிலை…மீளுமா இத்துருவங்களின் வாழ்வாதாரம்?
நாபா.மீரா
படம் பார்த்து கவி: ஆர்க்டிக்
previous post