படம் பார்த்து கவி: கடலும்

by admin 3
17 views

கடலும்,வான்வெளியும், மண்ணைத் தண்ணெனக்
குளிர்விக்கும் ஈரக்காற்றும் சூழ்ந்தொரு
தாலாட்டும் அற்புத இயற்கை எழில்
வட்ட மேசையும் இரு நாற்காலிகளும் பீங்கான்
கப் சாசர்கள் , ஜாடியில் செயற்கைப் பூக்கள்
சகிதம் வீற்றிருக்க அங்கே  ஒரு
நீயா நானா போட்டி இயற்கைக்கும்
செயற்கைக்கும்…. நீதானே என்னைத் தேடி
வந்தாய்…. எனும் மந்தமாருதத்தில் மேசை
ஆட மேல்விரிப்பில் ஒரு சலசலப்பு….

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!