கத்தரிக்கோல் வெட்டிய துணிதானே
உடையென உரு மாறும்
தடுமாற்றம் இன்றி சொல்வேன்
உருமாற்றம் வேண்டும் என்றால்
உடை பட்டு தான் ஆகவேண்டும்
காதல் மன மிரண்டு இணையும் போது
தடையாக இடைபடும் எல்லாம்
இரு துண்டாக உடைபடும்
இரண்டு இணை உலோகத் தகடு
ஒன்றாக இணையும் போது
உடைபடும் யாவும் அறுபடும்
சர் கணேஷ்