கருப்பு பியானோவின் மீது,
தீயின் நிறம் கொண்ட சிகப்பு ரோஜா ஒன்று.
அதன் மெல்லிய இதழ்களில்
ஏதோ ஒரு ரகசியத்தை ஒளித்து வைத்திருக்கிறது.
அந்த கருப்பு நிறத்தின் பின்னணியில்,
சிகப்பின் தீவிரம் இன்னும் கூடுகிறது.
ஒரு காதல் காவியம்,
இசைக்காகக் காத்திருக்கும் அமைதியான அழகோ அழகு இந்த காட்சி..
பன்னீர்ச் சிவப்பு ரோஜா ஒன்று மலர்ந்திருக்க,
அதன் இதழ்களில் மெல்லிய நீர் முத்துக்கள் ஜொலிக்கின்றன.
இசை பொழியும் அந்த நொடியில்…
இந்த அழகிய காட்சி மனதை வருடிச் செல்கிறது.
ரோஜாவின் மென்மையும், முத்துக்களின் குளிர்ச்சியும்,
பியானோவின் இனிமையும் ஒன்றுகலந்து ஒரு பேரானந்தத்தை அளிக்கிறது!.
இ. டி.ஹேமமாலினி