காட்டேரிகள் மட்டுமா குடிக்குது இரத்தத்தை
வன்முறை எனும் பெயரில் சில மனிதக்
காட்டேரிகளும்தாம்….இனம் அழிந்ததாய்த் தகவல்
தனக்கு மாற்றாய் ஒரு வேளை
இரத்தம் காணத் துடித்திடும் மனித
மிருகங்களை அனுப்பி வைத்ததோ
மதங்களின் பெயரில் தலைவிரித்து ஆடும்
தீவிரவாதம்… உடலில் இரத்தம் சுரக்கும்
கடினம் அறியாக் காட்டுமிராண்டிகள் மாயும்
நாளே அனைவர்க்கும் திருநாள் அன்றோ?
நாபா.மீரா
படம் பார்த்து கவி: காட்டேரிகள்
previous post