கூம்பிய மலைகளோ
கும்மிருட்டுக் குகைகளோ
பாதடியில் படையெடுக்கும் பாய்ந்தோடும் பாய்மக்கூரைகளோ
தடம் மாறாது தன் பணியுற்று
நெளிவோ சுழிவோ நெறியோடேற்று
நிலைமாறாதோடினால் நெட்டிய இலக்கும் எட்டிட ஏதுவாம்
கட்டியஞ் சொல்கிறது
நிதானித்து தொடங்கி நில்லாதோடும் நீண்ட புகையிரதம்!
புனிதா பார்த்திபன்
படம் பார்த்து கவி: கூம்பிய
previous post