சலனமற்ற நீரின் பிம்பம்…
இரட்டை அழகு காட்டுது மெதுவாய்..
தடித்த ஓட்டில் தலை காட்டும் சின்ன உயிர்…
ஈரத்தை தேடும் மெல்லடியும்…
புற்கள் மீது தனி வழியும்…
மின்னிடும் அதன் உணர் கொம்புகள்..
இறைவன் படைப்பின் அழகிய அதிசயம்…
இயற்கையில் கலந்த அழகோவியம்.
திவ்யாஸ்ரீதர் 🖋