சிகப்பு நிறம் ஜொலிக்க…
நீண்ட வடிவம் கொண்டு…
கண்ணாடி குவளையில் நீ கனலாய் குடி கொண்டாய்…
தனித்து ஒன்று மட்டும் தரையில் கிடக்க…
உள்ளுக்குள் மறைந்திருக்கும் உஷ்ணம் அறிய வைத்தாய்…
சிவந்த உடலில் பச்சை தொப்பி…
பார்வைக்கு நீ அழகோ அழகு…
சுவையில் தெரியும் உன் வீரம்…
நெஞ்சுக்குள் பற்றும் நெருப்பின் தாகம்.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: சிகப்பு
previous post