சின்ன உருவம், கூரிய கொடுக்கு, அப்பப்பா..
கண்ணுக்குத் தெரியா
விஷப்பூச்சி இனம் இவன்
மணல் வெளியில் மெல்ல நகரும் நேரம் பார்த்து கொட்டும்
பதுங்கியிருந்து நகர்ந்தும் கொட்டும்
கொடுக்கின் முனையில் விஷம் பதுக்கி வைக்கும்
பட்டவுடன் உடலில் வலி சுரீரெனும்
துள்ளித் துடிப்போம் நாம் நொடியில்
திகைத்து நிற்கும் மனித மனம்
பாறையிடுக்கில் பதுங்கும் திருடன்
இரவில் உலவும் பயங்கா ட்டும் தீவிரவாதி
சத்தம் கேட்டால் பதுங்கிக் கொள்ளும்
தைரியமாய் நெருங்கினால் சீறி எழும்
சிறு உயிர்தான், ஆனால் வலிமை அதிகம் பெற்றவன்
தன் காவலுக்குக் கூர்மையான ஆயுதம் முகத்தில் பொருத்தியவன்
ஜாக்கிரதையாய் நடந்திடு தோழா தோழா
தேளின் கொடுக்குக் கொடிய விஷம் நினைவில்
வை
இ.டி.ஹேமமாலினி
சமூக ஆர்வலர்.