நிர்மல வானம் நோக்கி பூமி
பீய்ச்சி அடிக்கும் தெளிப்பான் எதற்கோ?
ஒளிந்திருக்கும் குட்டித் தாரகைகள் காண்பதற்கா?
இரசாயன நெடியும் , வேகமும் தாங்கொணா
மேகராணியவள் கண்கள் கலங்கப் பெய்திடும் செயற்கை மழைக்கோ?மரங்கள், காடுகள்,
மழைநீர் சேகரிக்கும் ஏரிகள், குளம்,
குட்டைகள் அழிந்து ஆங்காங்கே கான்கிரீட்
கட்டிடங்கள் ஆக இயற்கையை அழித்து
இயற்கையிடமே யாசிக்கும் விந்தை மனிதர்கள்…
நாபா.மீரா
படம் பார்த்து கவி: நிர்மல
previous post