பசி மிகுதிக்கண் தாயைத் தேடும்
சிசுக் களிறதன் பிளிறல் கேட்டே
இதோ வருகிறேன் என்பதாய்ப் பதிலோசையுடன்
தன் இரையைப் பாதியில் விடுத்தே
ஓடி வந்து குட்டியின் பசி தீர்க்கும்
தாய் யானை…. ஆம் எந்த
இனமானால் என்ன தாய்களுக்கு
முதன்மை தாம் ஈன்ற சேய்களே
கண் கண்ட தெய்வம் தாயன்றோ
தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லையன்றோ?
நாபா.மீரா
படம் பார்த்து கவி: பசி
previous post