பனி மலையில் பட்டுச் சிதறும்
ஒளிக்கதிராலே பொன் நிறம் பூசும்
மலை முகட்டு முகில் எல்லாம்
குலலை முகில் என்று சொன்னால்
பொன் நிற குலலை கண்டால்
வெண் நிற கரடியும் வான் பார்க்கிறது
வாய் திறந்து வான் மேல்
விழிவைத்திருக்கும் வெண் கரடிக்கு
எப்படி தெரியும் பாவம்
பனிமலை உருகுவதும் பட்டுசிதறும்
சூரிய ஒளிக்கதிராலே என்று
சர். கணேஷ்