மனித குலத்தின் வன்முகம் கண்டு
காய்ந்து காய்ந்தே கோபத்தில் சிவந்ததோ?
மெல்லிய கொடி போல் நீண்டு
சிவந்த உடல்… அறுசுவையில் ஒரு
சுவையாம் கார்ப்பு, உணவு ருசிபட
தேவையே ஆயினும் அளவினை மிஞ்சின்
உடலின் ஒவ்வாமையால் ஆபத்தே.. உணவு
மட்டுமா சாரம் குறைந்து காரமாய்ச் செவிகள்
தீண்டும் வன்சொற்களும் ஆழ் மனத்தின்
ஒவ்வாமையாய் இதயம் தாக்கும் ஈட்டிகளே!
நாபா.மீரா
படம் பார்த்து கவி: மனித
previous post