மலையடிவாரத்தில் தடக் தடக் என
தண்டவாளத்தில் உருண்டு பின்னே ரயில்
வர முன்னே வந்து வேகமாய்
வளி மண்டலத்தில் ஊடே புகுந்து
கலந்திடும் புகை காற்று மண்டலத்திற்கே
ஓர் சவால் அன்றோ? கரியமில
வாயு கக்கும் புகையின் நிறம்
நெருப்புத் தணலின் சிகப்பாய்…. வாயு
மண்டலத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கிறதோ
ஒரு வேளை… புகையாவும் பகையே….
நாபா.மீரா
படம் பார்த்து கவி: மலையடிவாரத்தில்
previous post