மலையோரம் இரயில் வண்டி
மெதுவாக அது ஓடும்
புகைவண்டி உருவாக்கும்
புகை யெல்லாம் மலையாகும்
இரயில் ஓடும் வழி மீது
தலை வைத்து படுத்துத் தான்
தாய்மொழியாம் தமிழ் மொழியை
அழியாமல் காத்தோமே
வளமாக வளர்த்தோமே
அதுபோலே எல்லோரும்
இனிமேலே ஒன்றாகி
இரயில் ஓடும் வழி மீது
படுத்தேனும் தடுத்தேனும்
உருவாகும் புகை யெல்லாம்
குறைத்தேனும் தடுத்தேனும்
பூமியை வளமாக வளர்போமா?
அழியாமல் காப்போமா?
சர். கணேஷ்