மல்லிகையில் பன்னீர் துளி… மழைத்துளியாய் அழகாய் படிந்திருக்க…
மொட்டவிழ்க்க காத்திருக்கும் முகைகளும்…
பூத்து குலுங்கி சிரிக்கும் பூக்களும்…
பச்சை பசுமையில் கண்ணிற்கு விருந்தளிக்கும் இலைகளும்…
பார்க்கும் மனங்களில் நிறைவை கொடுக்க…
இனிமையாய் நெஞ்சத்தில்
நினைவுகள் தழுவ…
இயற்கையின் பேரழகு இதுவோ என, இதயம் பரவசமடைய!
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: மல்லிகையில்
previous post