மெல்லிய முதுகெலும்பு இல்லா உடல்
ஓட்டுக்குள் சுருட்டியே கரடுமுரடான பகுதிகளையும்
லாவகமாய்க் கடந்து நகர்ந்திடும் நத்தைகளின்
வாழிடம் ஈரம் படிந்த நிலப்பரப்பே…
ஆரோக்கியமான ஓடுகளே பாதுகாப்பு ஆதலின்
கால்சியம் மிகுந்த இலை தழையே
அவற்றின் உணவாம்
நத்தை போல் ஆரோக்கியம் பேணி
நாமும் போற்றிக் காத்திடுவோமே உடல்நலந்தனை……
நாபா.மீரா