வலைதள வாழ்க்கை
பறவைகள் பாடல் ஒலிக்கும் காலை
கண்கள் விழிக்கும் கைபேசியின்
ஓசையில்
அறிவிப்பைத் தேடி உருட்டில் கவனம் (Notification scroll)
நட்புகளின் அன்பு ‘லைக்’கிலும்…
உணர்வுகளின் வெளிப்பாடு ‘ஈமோஜி’யிலும்…
சோகமும், சிரிப்பும் ஸ்டேட்டஸிலும்…
மாயையில் சிக்கிய மனிதனின் வாழ்வு
கடந்தவை ‘மேமரீஸ்’ ஆக…
தோழமை ‘இன்வைட்’ ஆக…
மிகவும் நெருக்கம் ஆனாலும் தூரமாக…
இணையத்தில் மட்டுமே உறவுகளும் உரையாடலும் உள்ள நிலையில்…
வானம் பளிச்சென விழிக்க
ஆதவன் சுள்ளென வீச
கனவுத் துயில் களைந்துப்
பார் நண்பா…
சமூக வலைதளம்
விஞ்ஞானத்தின் வளர்ச்சி அருமைதான் நண்பா
ஆனால் அதில் முழுமையாக மூழ்கிடாதே
விழித்து எழு நண்பா விழித்து எழு
நா.பத்மாவதி
கொரட்டூர்