பூமியின் அரண்மனை, வானை தொடும் உயரம்பச்சைப் போர்வை போர்த்தி, காட்சி தரும் அழகுகிழக்கின் காவலன், மேற்கின் கண்காணிப்பான்இயற்கையின் சிற்பி, காலத்தின் சாட்சி !!
மிதக்கும் மேகங்கள், முகம் தழுவும் காற்று
மலர்களின் வாசம், மனதை கொள்ளை கொள்ளும்
ஓடைகள் ஓசை, இசை பாடும் மலை
பறவைகள் பாட்டு, இயற்கையின் தாலாட்டு !!
உன்னை நோக்கி பயணிக்கும் போது
மனதில் ஒரு அமைதி, ஆத்மாவில் ஒரு புத்துணர்ச்சி
உன்னை தொடும் ஒவ்வொரு கணமும்
வாழ்வின் அர்த்தத்தை உணர்த்தும் !!
உன் உச்சியில் நின்று பார்க்கும் போது
உலகம் ஒரு சிறு புள்ளி, நான் ஒரு துகள்
என்னை மிகச் சிறியவனாக உணர்த்தும்
அதே சமயம், உலகின் அழகை காட்டும் !!
மலை மன்னனே, உன்னை வணங்குகிறேன்
என் வாழ்நாள் முழுவதும், உன் நினைவில் இருப்பேன்
உன் அழகை பாடி, உன் பெருமையை சொல்லி
என் கவிதை வாழ்நாள் முழுதும் பாடும்.
ஆதூரி யாழ்..