வாசகர் படைப்பு: விண்ணெனும் வில்லிலிருந்து

by admin 3
76 views

விண்ணெனும் வில்லிலிருந்து
ஒளியெனும் அம்பு
வானை மறைத்த
அடரிருளுக்குத் தூதனுப்ப
பகல் பூவினை
எழில்மிகு மாலையாக்கி
விடியல் சோலை
வீணை மீட்ட
புலர்ந்தது காலை
புதிய இசையாய்!



ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!