காத்திருந்த மீதூதியத்தில்
கைவந்து சேர்ந்திடும்
சீருடை புதிதாய்
தீபாவளி புத்துடையாய்
மறுதிங்கள் மாணாக்கர்
வண்ணமாய் வலம்வர
வலியோடு வாதிட்டு
விருப்பின்றி விடுப்பெடுக்கிறேன்
திங்காத பலகாரம் தொண்டைக்கு எட்டியதில்
வயிற்றுக்கு நோவெனக்
கூசாது பொய்யுரைத்து.
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி:காத்திருந்த
previous post