வாரம் நாலு கவி: இழப்போன்று

by admin 3
30 views

இழப்போன்று இருந்தால் இன்னொன்று வருமாம்
இழந்ததிலும் இன்னொன்று எப்படியாகிடுமோ சிறந்ததென
தந்தையை இழந்தே நொந்திடும் தனயனுக்கு
சிந்தைநிறை தந்தைக்கு இணையென எதுவாகுமோ
தாயவள் மடிதவளும் தருணமதை இழந்திட்ட
தளிர்மழலை பெறவே இயலுமோ பிறரிலதை
தோல்வியிலே தோள்கொடுக்கும் தோழனையே இழந்துவிட்டால்
துவள்கையிலே துணையவன் போல் யாரளிக்கவியலுமோ
இழத்தலிலே இன்பம் இன்னொன்றை பெறுதலாலென
இழந்த உறவை ஈடுசெய்யவே சொல்லிடவியலுமோ!!?

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜேஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!