வாரம் நாலு கவி: உதைபடுவதற்கு

by admin 3
45 views

உதைபடுவதற்கு உருண்டையானாய்
அடிபட்டாலும்
அரத்தமானாய்
விளையாட்டுதனில்
மிதிபட்டாலும்
மதிப்புடன்தான்
பயணம்
பந்தெனும்
மொழியில்
இனப்பாகுபாடுகள்
எட்டியுதைக்கப்பட
எவரொருவரும்
எட்டாதுயரத்தில்
பந்தமாகிப்
போனாய்
உள்ளமதில்
முள்ளாய்க்
குத்தினாலும்
குதூகலமாகின்றாய்!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!